'போலீஸ் நிற்கும்போதே'... 'நொடியில் நைஸாக'... 'முதியவர் பார்த்த வேலை’... ‘பதறிப்போன ஆட்டோ டிரைவர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போலீசார் அருகில் நிற்கும்போதே, ஆட்டோவில் இருந்த மொபைல் ஃபோனை நைஸாக முதியவர் ஒருவர், திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை சேலையூரை அடுத்த சிட்லபாக்கம் எல்லைக்கு உட்பட்ட, திருமலை நகர் சந்திப்பின் அருகே, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 2  பேர், அங்கே ஒரு கடைக்கு முன்பு நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சவாரி ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ ஒன்று, திடீரென நின்று விட்டது. இதனால் ஆட்டோவில் பெட்ரோல் இருக்கிறதா என பரிசோதிக்க, ஆட்டோ ஓட்டுநர் கீழே இறங்கி பின்னாடி சென்று பார்த்துள்ளார். அப்போது அவருடன் சவாரி வந்தவர்களும், ஆட்டோவின் பின்புறம் சென்று, என்ன ஆயிற்று எனப் பார்த்துள்ளனர். 

யாரும் ஆட்டோவில் இல்லாத, அந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்திக் கொண்ட முதியவர் ஒருவர், போலீசார் இருக்கிறார்கள் என்பதையும் கவலைகொள்ளாமல், அவர்கள் முன்னிலையிலேயே, நைஸாக ஆட்டோவின் பின்புற சீட்டில் இருந்த மொபைல் ஃபோனை லாவகமாக திருடிக் கொண்டு சென்றுள்ளார். இதனை யாரும் கவனியாதநிலையில், ஆட்டோ ஸ்டார்ட் ஆனதும், அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர் உள்பட அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் சிறிதுதூரம் சென்றபின்னரே, பின்னால் சீட்டில் இருந்த மொபைல் ஃபோன் திருடு போனது, ஆட்டோ ஓட்டுநருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் தவித்து பதறிப்போன அவர், ஆட்டோ நின்ற இடத்திற்கு அருகே உள்ள கடையில் சென்று சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதில் முதியவர் போலீசார் முன்னிலையில், செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து,  ஆட்டோ ஓட்டுநர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார், மொபைல் ஃபோனை திருடிய முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

STEAL, THEFT, ARRESTED, OLD, MAN, AUTO, DRIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்