'மனைவி' இறந்தது தெரியாமல் 'சடலத்திற்கு' பணிவிடை செய்து 'பராமரித்து' வந்த 'முதியவர்!'.. மதுரையில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மனைவி இறந்தது தெரியாமல், முதியவர் ஒருவர் மனைவியின் சடலத்துடன் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
திருமங்கலத்தை அடுத்த செங்குளம் பகுதியில் ஏழாவது தெருவை சேர்ந்தவர் பாண்டி. 90 வயதான இவருடன் 85 வயதில் ஆண்டாள் என்கிற இவருடைய மனைவி இருந்த நிலையில், இவர்களின் மகன்கள், மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி கோவையிலும், தேனி மாவட்டத்திலும் வசித்து வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆண்டாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானதாக தெரிகிறது.
அவரை அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார் பாண்டி. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாண்டிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள மகளுக்கு பாண்டி தகவல் தெரிவிக்க, தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதனால் கோவையில் இருந்து அவரது மகள் வர முடியாத நிலை உண்டானது. எனினும் பாண்டியின் மகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையத்திற்கு அழைத்து தனது பெற்றோருக்கு உணவளிக்க கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட முதியோர்களுக்கு உணவளிக்க திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்பேரில் திருமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன், முதியவர்கள் இருக்கும் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு உணவை எடுத்துக் கொடுக்கச் சென்றார்.
ஆனால், பாண்டிக்கு உணவு கொடுத்து விட்டு அவரது மனைவிக்கு உனக்கு உணவு கொடுக்கப் போகும் போதுதான் படுத்த படுக்கையில் பாண்டியின் மனைவி ஆண்டாள் இறந்து கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது. அதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தவிர உடல்நலமின்றி இருந்த முதியோரும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருமணம் செய்துவைக்காத விரக்தியில்'.. 'பெற்றோருக்கு' மகன் கொடுத்த கொடூர 'தண்டனை'!
- 'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்!.. மனதை நொறுக்கிய துயரம்!
- 'குழந்தை, குட்டிகளோடு ஷாப்பிங் போற நேரமா'...'கொஞ்சம் கூட பயம் இல்ல'...இனி வேற பிளான் தான்!
- ‘லாக்டவுன்லாம் முடிஞ்சுது.. லீவுக்கும் சேத்து க்ளாஸ்!.. ஸ்கூலுக்கு கெளம்புங்க!’.. தெறிக்கவிட்ட பெற்றோர்... குழந்தைகளின் ‘வைரல்’ ரியாக்ஷன்ஸ்!
- ‘கொரோனா விழிப்புணர்வு’!.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..!
- "ஐ.க்யூ லெவல் தான் அறிவுத்திறனை நிர்ணயிக்கிறதா?..." "குழந்தைகளை' ஒப்பிடுவது சரியா?..." எதார்த்தத்தை பகிரும் 'நிகழ்கால' மருத்துவம்...
- ‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்...
- 'எங்க புள்ளையே போயிட்டான்!.. அதனால'... உயிரிழந்த ஒரே மகனின் நினைவால்... பாசப் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!.. நெஞ்சை உலுக்கும் உண்மை சம்பவம்!
- இனி ‘இதெல்லாம்’ பெற்றோர்கள் ‘கையில்தான்’... ‘குவியும்’ புகார்களால் ‘செக்’ வைத்த ‘டிக்டாக்’... அறிமுகப்படுத்தியுள்ள ‘புதிய’ வசதி...
- 'வாய் பேச முடியாத தந்தை'... 'வயதான தாயை பார்த்துக் கொள்ள'... 'கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!