‘வேண்டாமென எவ்வளவு கூறியும் கட்டாயப்படுத்தினார்..’ முதியவர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் முதியவர் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்த வழக்கில் கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மாங்காடு அருகே பூட்டப்பட்ட வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வருவதாக போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸார் பூட்டை உடைத்துச் சென்று பார்த்தபோது வீட்டின் உரிமையாளர் பாஸ்கரன் (78) உள்ளே இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருந்ததால் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

பின்னர் பிரேதப் பரிசோதனையில் அவர் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததும் தெரிய வந்துள்ளது. மனைவியுடன் கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த பாஸ்கரன் பணம், நகைக்காகக் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் பாஸ்கரனின் செல்ஃபோனை ஆராய்ந்து பார்த்தபோது அகமது என்பவரிடம் அவர் பேசியதும், கொலை நடந்த நாளில் இருந்து அந்த நபர் காணாமல் போனதும் தெரிய வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அகமது பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தபோது அவர் பாஸ்கரனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

போலீஸாரிடம் அகமது அளித்த வாக்குமூலத்தில், “நான் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு பாஸ்கரன் அடிக்கடி சாப்பிட வருவார். அப்படி வரும்போது என்னிடம் சகஜமாகப் பேசியவர் என்னுடைய பணக் கஷ்டத்திற்கு உதவுவதாகவும் கூறினார். ஒரு நாள் என்னை அவருடைய வீட்டிற்கு வரும்படி ஃபோன் செய்தார். அங்கு சென்ற என்னிடம் நீயும் நானும் சந்தோஷமாக இருக்கலாம் எனக் கூறித்  தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார். நான் வேண்டாமென எவ்வளவு கூறியும் என்னைக் கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நான் அவரை செங்கல்லால் தலையில் ஓங்கி அடித்தேன். பின்னர் என்னை அவர் காட்டிக் கொடுக்காமல் இருக்க லுங்கியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

MURDER, CHENNAI, SHOCKING, CONFESSION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்