‘ஆத்தீ எவ்வளவு பெருசு..!’.. கிரிக்கெட் விளையாடிய இடத்தில் கிடந்த வெடிகுண்டு.. திருவள்ளூர் அருகே அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய இடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே தனியார் விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அப்போது மண்ணில் ஏதோ இரும்பு குண்டு இருப்பதுபோல் தெரிந்துள்ளது. உடனே இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அது ஒரு வெடிகுண்டு போல் இருந்ததால், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், துருப்பிடிக்கப்பட்ட இரும்பால் ஆன வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து கும்மிடிப்பூண்டியில் வெடிகுண்டுகளை பாதுப்பாக வெடித்து செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வெடிகுண்டு அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்காலைகளில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் 1628 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு, அவை ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் செயலிழக்க வைக்கப்பட்டன. இதனை அடுத்து ஈகுவார்பாளையம் அடுத்த ராமசந்திரபுரத்தில் கடந்த 20-ம் தேதி சுமார் 800-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க வைக்கப்பட்டன. இந்தநிலையில், பெரியபாளையம் பகுதியில் துருப்பிடிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்