ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... சாலையில் சுற்றி திரிந்த முதியவருக்கு... சாக்கு மூட்டையில் காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கடை அருகே ரோட்டில் பிச்சை எடுத்து வந்த முதியவரின் பையில் ரூ.74 ஆயிரத்து 630 பணம் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கடை அருகே முன்சிறையை அடுத்த ஒச்சவிளை பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பு. அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்தார். இவர் ஒரு சாக்குமூட்டையை மட்டும் பத்திரப்படுத்தி கூடவே எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் முதியவருக்கு உடலில் புண்கள் ஏற்பட்டு முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு புண் பாதிப்பு அதிகம் இருந்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் வலியுறுத்தினர். ஆனால் முதியவர் சுகாதார நிலையத்திலேயே இருந்தார்.

இதனால் அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் முதியவரை ஆசாரிப்பள்ளம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதியவர் உடன் வைத்திருந்த சாக்குப்பையை வாங்கி சிலர் சோதித்தனர். அதில் சில்லறை பணமாக மொத்தம் ரூ.74 ஆயிரத்து 630 இருந்தது.

பணம் பாதுகாப்பாக இருக்க அதனை ஊராட்சி தலைவர் ஓமனாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் முதியவரை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிச்சை எடுத்து வந்த முதியவரின் பையில் ரூ.74 ஆயிரத்து 630 பணம் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்