வாக்களித்த பின் திடீரென உயிரிழந்த முதியவர்!.. தேர்தல் நாளில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க்க சென்ற முதியவர் அங்கேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்களித்த பின் திடீரென உயிரிழந்த முதியவர்!.. தேர்தல் நாளில் நடந்த சோகம்!

மக்களவை மற்றும் 18 தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குபதிவில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என பலரும் தங்களது வாக்கை செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முதியவர் முருகேசன் என்பவர் வாக்களித்துவிட்டு வரும் போது திடீரென மயங்கி அங்கேயே உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LOKSABHAELECTIONS2019, ELECTIONS2019, TNELECTION2019

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்