சென்னையில் 'இ-பாஸ் சேவை' நிறுத்தமா?... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா?...' 'நிலவரம் என்ன?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இ-பாஸ் சேவையை நிறுத்துவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உறுதி செய்யப்படுகிறது. அதிலும் சென்னையிலேயே நோய்த் தொற்று அதிகமா கண்டறியப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். மகாராஷ்டிராவில் 82,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் 22,149 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
சென்னையில் பாதிப்பு அதிகம் இருக்கும் சூழலில் வரும் நாள்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து சென்னையை முழுமையாகத் தனிமைப்படுத்த ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க தற்போது இ-பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இ-பாஸ் சேவையை நிறுத்துவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேலூரில் திடீரென்று வேகமெடுக்கும் கொரோனா!.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் அடங்காத கொரோனா!.. ஒரே நாளில் 1,562 பேருக்கு தொற்று!.. குணமடைவோர் எண்ணிக்கை இவ்வளவா?.. முழு விவரம் உள்ளே
- 'கல்யாணம்' முடிஞ்ச கையோட... 'மாப்பிள்ளையை' அழைத்துச் சென்ற 'அதிகாரிகள்'... 'பரிசோதனை' முடிவால் பிரிந்த 'புது ஜோடி'!
- நல்லபடியா 'தூங்கிட்டு' இருந்தாங்க... வீட்டுக்காரரே 'பொண்டாட்டி', 'புள்ளைங்க' மேல 'தீ' வெச்சுட்டாரு... சென்னையை உலுக்கிய 'கோரம்'!
- 'தைரியமான ஆளா இருந்தா தனியா வா டா'... 'மோசமான பிளானில் சிக்கிய இளைஞர்'... 'பாதியில் பயந்து ஓடிய நண்பர்'... சென்னையை கதிகலங்க வைத்த சம்பவம்!
- 'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...
- "வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்!".. சென்னையில் சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'தமிழகத்தில்' பரவும் 'தீவிரத்தன்மை' கொண்ட... 'புதிய வகை' கொரோனா வைரஸ்... இது 'வூகானிலிருந்து' பரவியது இல்லை...
- தமிழகத்தில் 269 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!.. ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'அக்யூஸ்ட்டுக்கு' தண்டனை வாங்கிக் 'குடுக்கலாம்னு' பாத்தா... 'அக்யூஸ்டே தண்டனை குடுத்திடுறான்...' 'கொள்ளையன்' மூலமாக '6 போலீசாருக்கு' கொரோனா...