‘சிறுசு, பெருசு என ரகசிய கோட் வேர்ட்’.. தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் டிரம்.. அதிரடி சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி அருகே மணலில் புதைக்கப்பட்டிருந்த டிரம்மில் புகையில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வைப்பார் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவருக்கு ஆற்றங்கரையோரத்தை ஒட்டியுள்ள கேசவன் நகர் பகுதியில் தோட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தோட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி  வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்துடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்று மணலில் சுமார் 5 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் டிரம் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அதை திறந்து பார்த்தபோது 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அனைத்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தோட்டத்தையும் சீல் வைத்து மூடினர்.

இதுகுறித்து கூறிய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், ‘மாநில உணவு பாதுகாப்பு வாட்ஸ் அப் எண்ணிற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி, கார்த்திக் ராஜ் என்பவரது பன்றி பண்ணை மற்றும் தோட்டங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பட்டு, உணவு பாதுகாப்பு தரச்சட்டம் மற்றும் காவல்துறையின் குற்றவியல் சட்டம் மூலமாக வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தோட்ட உரிமையாளர் என சொல்லப்படும் கார்த்திக்ராஜ் மீது சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக விளாத்திகுளத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

புகையிலை பொருள்களை வீடு, கடைகள் பதுக்கி வைத்திருந்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவதால், அதனை விற்பனை செய்ய பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சின்ன ஆடு, பெரிய ஆடு, சிறுசு, பெருசு (பன்றி) என சில ரகசிய வார்த்தைகள் இருப்பதாகவும், இதைக் கூறி இருசக்கர வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்