'இ பாஸ்' கிடைக்கல... அதுனால அந்த கடையில இருந்து... போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த 'ஜெராக்ஸ்' கடை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சில மாவட்டங்களை ஒன்றிணைத்து மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மண்டலத்தில் இருந்து அடுத்த மண்டலத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தகுந்த ஆதாரங்களுடன் இ பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிலர் போலி இ பாஸ் தயாரித்து சொந்த ஊர் சென்று வருகின்றனர்.
இதனையடுத்து, கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் பகுதியில் இருந்து ஒருவர் விருதுநகர் அருகே சென்று கொண்டிருந்த போது போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த நபர் போலி இ பாஸ் பயன்படுத்தி சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இ பாஸ் கிடைக்காத காரணத்தால் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஜெராக்ஸ் கடையில் போலி இ பாஸ் அச்சடித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் சூலூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர் உடனடியாக சென்று அந்த ஜெராக்ஸ் கடையில் ஆய்வு நடத்தினர். பின்னர், அந்த கடையை சீல் செய்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும், அந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஜெராக்ஸ் கடையை பயன்படுத்தி இன்னும் வேறு யாரவது போலி இ பாஸ் தயாரித்து சொந்த ஊர் சென்றுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாவட்டம் விட்டு மாவட்டம் போறீங்களா'?... 'இ பாஸுக்கு இந்த டோக்கனை கூட காட்டலாம்'... தமிழக அரசு அறிவிப்பு!
- “வீட்ல புதையல் இருக்கு.. ரூ. 3 லட்சம் செலவாகும்!” .. 'மோதிக்கொண்ட போலி மாந்திரீகர்கள்'.. விஏஓ உட்பட கூண்டோடு சிக்கிய கும்பல்! திருப்பங்கள் நிறைந்த பரபரப்பு சம்பவம்!!
- 'அக்டோபர் 15 வரை'... 'உணவங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல்'... மத்திய அரசு விளக்கம்!
- 'வாட்ஸ் அப்-ல இதெல்லாம் இனி செய்ய முடியாது!'... வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!
- #coronalockdown: ‘பணியாளர்களே இல்லை!’.. ‘ஆனாலும் பணத்தை வைத்துவிட்டு’.. நெகிழ வைத்த பேக்கரி கடையும் மக்களின் மனிதமும்!
- 'ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு' ... 'வாடகை ஒண்ணும் வேணாங்க' ... கோவை வீட்டு உரிமையாளரின் நெகிழ்ச்சி முடிவு!
- '500' ரூபாய்க்கு போலி 'ஆதார்'... 'அட்ராசிட்டி' செய்யும் 'பிரவுசிங்' சென்டர்...6 மாசம் 'அலைஞ்சு' வாங்குன 'கார்டு'... 5 நிமிஷத்துல 'ரெடி'யாகும் 'அதிசயம்'...
- 'கொரோனா' பெயரில் 'கம்ப்யூட்டர்' வைரஸ்... 'தகவல்களை' திருட காத்திருக்கும் 'கும்பல்'... 'நோ ஷேர்', பாஸ்வேர்ட், பாஸ்கோட், ஓடிபி...
- ‘விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி’.. ‘பெண்களிடம் ஆபாச உரையாடல்!’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்!’
- ‘70 கிலோ மீன்களில் பார்மலின் தடவி விற்பனை’.. 430 கிலோ கெட்டுப்போன மீன்கள்!.. ‘பீதியை கிளப்பிய மீன் மார்க்கெட்!’