‘ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு’!.. இந்தியாவில் முதல் மாநிலமாக அறிவித்த அரசு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக ஊரடங்கை நீட்டிப்பதாக ஒடிஷா மாநிலம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதனால் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காணொலி மூலம் மாநில கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலான கட்சிகள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனாலும் வரும் 11ம் தேதி மாநில முதல்வர்களுடன் நடைபெறும் ஆலோசானை கூட்டத்திற்கு பிறகே இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஒடிஷா மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 17ம் தேது வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ஒடிஷா மாநிலத்தில் இதுவரை 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரழந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் முதல் மாநிலமாக ஊரடங்கை நீட்டித்து ஒடிஷா அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்