'மினி கிளினிக்கில் பணிபுரிவதற்காக’... ‘செவிலியர்கள் இந்த விஷயத்தில் யாரிடமும்’... ‘தமிழக அரசு எச்சரிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மினி கிளினிக்குகளில் பணிபுரிய செவிலியர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். மேலும் பல இடங்களில் தொடங்கப்பட்டும் வருகிறது. காய்ச்சல், தலைவலி உள்பட சிறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மினி கிளினிக் பணி, நிரந்தர அரசு பணி என கூறி செவிலியர்களிடம் சிலர் பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம், இது நிரந்த அரசு வேலை என்று பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர், இந்த பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது. புதிதாக தொடங்கப்படும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன பணியாளர்களே ஆவர். இதனால் அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்படாது. இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் நிரந்தரமற்ற, நிச்சயதன்மையற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும், மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில் பணிபுரிய, விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பணிக்கு யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால், தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா தடுப்பூசி போட்டதும்'... 'நேரலையில் மயங்கி விழுந்த செவிலியர்!'.. உண்மையில் நடந்தது என்ன? நிபுணர்களின் மருத்துவ விளக்கம்!
- கொரோனா தடுப்பூசி போட்ட கொஞ்ச நேரத்தில் சரிந்த ‘நர்ஸ்’.. மேடம் உங்களுக்கு என்ன ஆச்சு..? டிவி நேரலையில் நடந்த அதிர்ச்சி..!
- 'முடியாது.. மாட்டேன்!'... கொரோனா பரிசோதனைக்கு ‘நோ’ சொல்லி அடம் பிடிக்கும் இளம் செவிலியர்!.. அழுதுகொண்டே வெளியிட்ட காரணம்!
- 'இரவில் டியூட்டி முடித்து வடபழனி சாலையில் நின்ற பெண்'.. ‘தலைமைக் காவலர்’ செய்த ‘மோசமான’ காரியம்! பதற வைக்கும் சம்பவம்!
- 'கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' 'பஸ்ல ஏறினப்போ புடவ சிக்கி...' 'நர்ஸ்க்கு நடந்த விபத்து...' 'அதுக்கப்புறம் தெரிய வந்த உள்ளத்தை நொறுக்கும் சோகம்...!
- வெளிநாட்டில் கணவரை வெட்டி.. குடிநீர் தொட்டியில் மறைத்த இந்திய செவிலியர்!. .. உறுதியான மரண தண்டனை!
- 'டூட்டி முடிச்சிட்டு வெளியே வந்த நர்ஸ்'... 'உயிருக்கு உயிராக நேசித்த கணவன் செய்த வெறிச்செயல்'... 'சிதைந்த மொத்த குடும்பம்'... அதிரவைக்கும் பின்னணி!
- என்ன பண்ணியும் நிக்க மாட்டுதே... 'இரட்டை' பிரசவத்துக்கு பின் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்... 'துரித' யோசனையால் தாயைக் காப்பாற்றிய நர்ஸ்!
- ’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...!' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...? - அதிர்ச்சியில் செவிலியர்கள்...!
- 'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!