அவங்க மகனுக்கா இந்த நிலைமை...! 'மக்கள் பணிக்கு போய்கிட்டு இருக்கப்போ ரோட்டுல ஒருத்தர்...' நர்ஸ் செய்த நெகிழ்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன் உடன் பணியாற்றிய செவிலியரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மற்றொரு செவிலியர், போலீஸ் உதவியோடு அவருக்கு தேவையான உதவிகளை செய்து மனநல காப்பகதில் ஒப்படைத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Advertising
Advertising

செவிலியர் ராணி என்பவர் நாகை மாவட்டம் வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  செவிலியராக இருப்பவர். சில நாட்களுக்கு முன்பு வழக்கமான மக்கள் பணிக்காக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, நாகை புத்தூர் அருகே சாலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.

அவரை உற்று கவனிக்கும் போது தான் அந்த மனிதர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் மகப்பேறு உதவியாளராக தம்முடன் பணியாற்றி மறைந்த ராஜம்மாவின் மகன் சீதாராமன் என்பதை அறிந்தார். தன்னுடைய பணிக்காலத்தில் அயராது உழைத்தும், தேவைப்படுவோருக்கு ஒரு சில உதவிகள் செய்த ராஜம்மாவின் மகன் சீதாராமனுக்கா இந்த நிலைமை என்று எண்ணி ராணி அவரை தன்னுடன் அழைத்து வந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட அவரால் தன்னுடைய இருப்பிடம் மற்றும் உறவினர் குறித்து விவரம் ஏதும் சொல்லத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட ராஜம்மாவின் மகனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார் ராணி. ராஜம்மாள் இறந்து விட்டதால் அவர்களுடைய நெருங்கிய உறவினர் யாரென தெரியாததாலும் அவரை உரிய இடத்தில் சேர்க்க முடிவு செய்தார்.

அடுத்த நாள் காலை நாகப்பட்டினம், வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜை தொடர்புகொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சீதாராமனை உறவினரிடமோ அல்லது பாதுகாப்பகத்திலோ சேர்த்திட உதவுமாறு கேட்டுள்ளார். ராணியின் உதவும் மனபந்நன்மையையும், ராஜம்மாவின் மகனின் நிலையையும் உணர்ந்த காவலர் விவேக் தன்னுடைய  இதரப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்நாடு அரசு மறுவாழ்வுத்துறை அனுமதியுடன் செயல்பட்டுவரும் கார்டன் மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் பேசினார் விவேக் ரவி ராஜ்.

இதையடுத்து அன்று மாலை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து, கார்டன் மனநல மறுவாழ்வு மைய பொறுப்பு நிர்வாகி ஜெயந்தியிடம் சீதாராமனை ஒப்படைத்தார்.

அனாதையாக, ஆதரவற்று இருந்த சீதாராமனை தற்போது பொறுப்புமிக்க ஒரு அமைதியான இடத்தில் ஒப்படைத்த மன நிறைவோடு செவிலியர் ராணியும், காவலர் விவேக்கும் காணப்பட்டனர். நமக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது நம்மால் ஆன உதவியை அவர்களுக்கு எப்போதும் செய்திட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவர்களை இணையத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்