'விடிஞ்சா' கல்யாணம்... இரவில் 'விபரீத' முடிவெடுத்த நர்ஸ்... இவளாவது 'நல்லா' இருப்பான்னு நெனச்சேனே... கதறிய தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்று காலை திருமணத்தை எளிய முறையில் நடத்தலாம் என்று இரு வீட்டினரும் முடிவு செய்திருந்தனர்.

Advertising
Advertising

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொழுப்பேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65) மனைவி மல்லிகா. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகன் மனநலம் பாதிக்கப்பட்டதில் கடந்த சில வருடங்களுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மனைவி, மூத்த மகள் இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டது.

துரைசாமி அவர்கள் இருவரையும் வீட்டில் வைத்து கவனித்து வருகிறார். அவரின் இளைய மகள் திவ்யா(27) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருகிறார். துரைசாமிக்கு ஆதரவாக இருந்தவர் திவ்யா தான். கடந்த 2 மாதங்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு சென்று 2 மாதங்களுக்கு பின் சென்னை திரும்பினார்.

திவ்யாவின் அம்மா மல்லிகாவின் தம்பி ரவி என்பவர் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார். திருமணமாகி மனைவியை இழந்த ரவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திவ்யா இவரது வீட்டில் தங்கியிருந்து தான் வேலைக்கு சென்று வந்தார். இதனால் மனைவியை இழந்த மைத்துனர் ரவிக்கும், திவ்யாவுக்கும்  திருமணம் செய்து வைக்க துரைசாமி முடிவு செய்தார்.

இவர்களின் திருமணத்தை இன்று அதிகாலையில் வீட்டிலேயே வைத்து நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்றிரவு தன்னுடைய அறையில் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி கதவை உடைத்து உள்ளே சென்று திவ்யாவை கீழிறக்கி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் திவ்யாவின் சடலம் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அவரின் தந்தை  துரைசாமி, '' என்னுடைய மகள் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ்வாள் என்று நினைத்தேன். ஆனால் சோதனைக்கு மேல் சோதனையாக அவளும் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்,'' என்று அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்