அடுத்த 24 மணிநேரத்தில்... விடைபெறும் வடகிழக்கு பருவமழை... பனிப்பொழிவு நிலவும்... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலக உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபா் 16-ம் தேதி தொடங்கியது. முதல் பாதியில் மழை பொழிவு நன்றாக இருந்தாலும், நவம்பா் மாதத்தில் சற்று மழை குறைந்தது. டிசம்பா் மாதத்தில் பரவலாக நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபா் 1-ம் தேதி முதல் டிசம்பா் 31-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 440 மி.மீ. ஆனால், இந்தப் பருவ காலத்தில் 450 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 2% அதிகம் என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பருடன் முடிவடைந்தாலும், மேற்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஜனவரியிலும் மிதமான மழை பெய்து வந்தது. இதற்கிடையில், கடந்த 2 நாள்களாக மழை அளவு குறைந்துள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை​யும், காலையில் பனிப்பொழிவும் நிலவும். வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையாக விடைபெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RAIN, TAMILNADU, SNOW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்