‘கொட்டித் தீர்க்குது மழை’... தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றுதான் வடக்கிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவித்திருந்தநிலையில், ஒருநாள் முன்னதாகவே வெளுத்து வாங்கும் அளவுக்கு மழை பெய்ய தொடங்கியுள்ளது. 

வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால்,  சென்னை வடபழனி, கிண்டி ரயில்நிலைய மேம்பாலப்பகுதிகள், நந்தனம் சிக்னல், கோடம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, போரூர் - பூந்தமல்லி, வண்டலூர் ஜிஎஸ்டி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை என பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வட சென்னை பகுதிகளான திருவேற்காடு, அயனம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில், கனமழை மற்றும் வெள்ளநீரால் சூழ்ந்தது. தற்போது இதை அகற்றும் பணி நடைப்பெற்றது.

இந்நிலையில், இடைவெளிவிட்டு மழை தொடரவே வாய்ப்பு இருப்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னையின் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மேகங்கள் நன்றாக இணைந்துள்ளதால், கொஞ்சம் இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மழையால் சிரமங்கள் நிகழ்ந்தாலும், மக்களை இந்த மழை குளிர்விக்க செய்கிறது.

 

RAINS, HEAVY, CHENNAI, WEATHERMAN, TN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்