‘புயலால் அதிக கனமழை பெய்து’... ‘ஏரிகள் நிரம்பியும், கை கொடுக்காமல்’... ‘இயல்பை விட குறைவு’... ‘வானிலை மையம் தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயலுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது. இதற்கிடையில் வந்த நிவர் புயலால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை அதிகளவில் பெய்தது. இதனால், தமிழகத்தில் ஏரிகள் அதிகம் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 403 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.

335 ஏரிகள் 75%, 140 ஏரிகள் 50% , 31 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த நவம்பவர் 1 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இயல்பு மழை அளவு 34 செ.மீ. ஆகும். ஆனால் இதுவரை மழை பெய்த அளவு 29 செ.மீ. மட்டுமே. இது இயல்பை விட 15% குறைவு.

மேலும், தற்போது 48 மணி நேரத்திற்குப் பின் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அது தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபின்னர் உறுதியாக அறிவிப்போம். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பொதுவாக தென்தமிழகப் பகுதிகளுக்கு அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகத்தை நோக்கி வடதிசை காற்று வீசுவதாகவும், நிவர் புயல் கரையை கடந்துள்ளதால் நிலப்பரப்பிலும் காற்று வீசுவதாலும், திடீரென குளிர் நிலவுவதாகவும்’ அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்