ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்கிற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலரும் ஒமைக்ரான் வகை கோவிட்-19 தொற்றால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதால், தொற்று பாதிப்பு வந்தாலும் அதன் தாக்கம் குறைவாக இருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தொற்று வரும் பட்சத்தில், அதன் வீரியம் அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '16-1-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய இ-காமர்ஸ் நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும். இதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பினை நல்குவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பொது இடத்தில் மாஸ்க் அணியவில்லையா? அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை..!
- "ஒமைக்ரான் எல்லாருக்கும் வந்து போகும், ஆனா பயப்படத் தேவையில்ல" - மருத்துவ நிபுணர் கூறியுள்ள முக்கிய தகவல்
- பொங்கல் தொகுப்பில் ஹிந்தி எழுத்துகளா? அமைச்சர் விளக்கம்
- அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்
- ஒமைக்ரானுக்குன்னே தடபுடலா வருது புது தடுப்பூசி! பிரபல தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்லிருக்கு பாருங்க!
- பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர்ல இருந்து சென்னை வர திட்டமிடுறீங்களா?... உங்களுக்கு முக்கிய அறிவிப்பு!
- சென்னை மருத்துவமனையில் கொரோனா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல்வர்..!
- செமஸ்டர் தேர்வுகள்... மாணவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பரபரப்பு உத்தரவு!
- வருது.. வருது.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு... தமிழக அரசு சொல்வது என்ன? பரபரப்பு தகவல்கள்!!
- ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்... ஒரே நாளில் உலக பேமஸ் ஆன கொல்லிமலை