காலாண்டு விடுமுறை இல்லையா..? உண்மை என்ன..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இல்லை என வெளியான தகவல் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வரும் 23 -ம் முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்க உள்ளது. இந்நிலையலில் சமுத்திர சிக்ஸா அபியான் அமைப்பு மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 23 -ம் தேதி முதல் அக்டோபர் 2 -ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடத்த சுற்றரிக்கை வெளியிட்டது. காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நாள்களில் இந்த அறிவிப்பு வந்ததால் விடுமுறை கிடையாது என வதந்தி பரவத் தொடங்கியது.
இந்நிலையில் காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறைகளை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமே முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. காந்திய சிந்தனை நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் எனவும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சொகுசாக வாழ ஆசைப்பட்டேன்’... ‘24 இளம் பெண்களை கடத்தி’... ‘வீடியோ எடுத்து’... ‘இளைஞரின் அதிர வைத்த வாக்குமூலம்’!
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- ‘அவரப் பத்தி எனக்கு தெரியாது’... ‘ஆனா இவங்க ரெண்டு பேரும்’... 'அமைச்சர் தடாலடி பதில்'!
- 'கழுத்தளவு தண்ணீர்.. ஆனாலும் கல்விச் சேவைய ஒருநாளும் நிறுத்துனது இல்ல'.. 'ஒருநாள் தவறி விழுந்து'.. சல்யூட் அடிக்க வைத்த ஆசிரியை!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- அம்மாடியோவ்! பொங்கலுக்கு இம்புட்டு நாள் லீவா?.. விவரம் உள்ளே!
- ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்ட’.. ‘4ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்’..
- ‘புதிய வாகன அபராதத் தொகை’... 'தமிழக அரசின் அதிரடி திட்டம்'... 'வெளியான புதிய தகவல்'!
- ‘அதிவேகத்தில் வந்த லோடு வேன்’... ‘சைக்கிளில் வீடு திரும்பியபோது’... ‘மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!