"கட்டணமில்லாமல் செல்லும் வாகனங்கள்!"... "வெறிச்சோடிய சுங்கச்சாவடி!"... "பயணிகள் குஷி"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ளது, பரனூர் சுங்கச்சாவடி. நேற்று முன்தினம், அந்த சுங்கச்சாவடி வழியாக சென்ற அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் கட்டணம் செலுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பல்வேறு பேருந்துகளில் பயணித்தவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதபடுத்தப்பட்டன.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு 1 மணி முதல் தற்போது வரை தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள், இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சுங்கச்சாவடியை பழைய நிலைக்குக் கொண்டு வர அதிகபட்சமாக ஒரு வாரம் ஆகலாம் என்றும், அதுவரை கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் சுங்கச்சாவடி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கட்டணமில்லாமல் இலவசமாக சுங்கச்சாவடியில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

CHENGALPATTU, TOLLPLAZA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்