தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை, ஆணுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய நிலையில், அந்த இளம்பெண் மறுக்கவே, அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரின் சார்பில், ஜாமீன்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அந்த நபருக்கு ஜாமீன் தர மறுத்தார். மேறும் அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கவும் நீதிபதி ஆணையிட்டார். தன்னை காதலிக்குமாறு எந்த ஒரு பெண்ணையும் வற்புறுத்தும் உரிமை, எந்த ஒரு ஆணுக்கும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பெண் என்பவர் தனது விருப்பங்களெல்லாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே, இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற காரணம் என்றார் நீதிபதி. பெண்கள் மற்றவர்களுடன் பழகும் முறைகளே, அவர்களை மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவதாக நீதிபதி தெரிவித்தார்.
அதற்காக பெண்ணை கத்தியால் குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதுபோன்ற வழக்குகளில் அனுதாபம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
மற்ற செய்திகள்
மைசூர் தசராவில் புகழ்பெற்ற யானை 'துரோணா'.. உயிருக்குப் போராடிய காட்சிகள்.. கதிகலங்க வைக்கும் வீடியோ!
தொடர்புடைய செய்திகள்
- 'டிக்-டாக்' செயலி மீதான தடை .. நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்.. மீண்டும் 'டிக் டாக்' பதிவிறக்கம்?
- பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு.. ஜாமீனில் எடுத்த தந்தையை கொன்ற மகன்!
- டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- சேலம் எட்டு வழிச் சாலை.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- 11 மாத சிறைவாசத்துக்கு பின் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி!
- ‘வாயைத் திறக்க வழியே இல்லை’.. ஏன்னா ‘நிபந்தனைகள்’ அப்படி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!
- அஞ்சு மரக்கன்றுகளை நட்டா, அரஸ்ட் வாரண்ட் கேன்சல்.. வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்!