VIDEO: 'அடுத்த 3 வருஷத்துக்கு Hike இருக்காது!.. இன்னும் இத்தனை கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்!'.. ஆனந்த் சீனிவாசன் பகிரும் தகவல்கள்! Exclusive Interview!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொடர்ந்து இந்திய வர்த்தகம், GDP, தனிநபர் வேலை, வருமானம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிவரும் ஆனந்த் சீனிவாசன் Behindwoodsக்கு அளித்த அண்மை பேட்டியில் அடுத்த 3 வருடங்களுக்கு இப்படித்தான்(இப்போதிருக்கும் இந்நிலைதான்) இருக்கப் போகுது. சம்பளம் Hike ஆகவே ஆகாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் GDP குறித்து பேசிய ஆனந்த் சீனிவாசன், பணமதிப்பிழப்பினால் GDP குறைந்ததையும், அதனால் எழுந்த GST சிக்கல் குறித்தும் நிபுணர்களின் கருத்துக்களோடு சேர்த்து சுட்டிக்காட்டினார்.  “கொரோனா பாதிப்புகள் இன்னும் முடியாததால், உள்ளூர் டாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் கூட, தனிநபர்கள் இன்னும் 3 வருடங்களுக்கு பாதிக்கப்படவே செய்வார்கள் என்றும் பொருளாதாரம் என்பது தனிநபர் செலவீனங்களுக்கான தன்னம்பிக்கைதான். இன்னும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பள பிடித்தம், கல்வி சார்ந்த வணிக முடக்கம், திரைத்துறை முடங்கியிருப்பதால் சிக்கிக் கொண்டிருக்கும் பணப்புழக்கம் உள்ளிட்டவையெல்லாம் சகஜ நிலைக்கு நாம் திரும்புவதற்கான தன்னம்பிக்கை இன்னும் உருவாகவில்லை என்பதை காட்டுகிறது.” என்றும் அவர் பேசினார். 

“பொதுப்போக்குவரத்து திறந்துவிடப்பட்டதால் இதெல்லாம் மாறிவிடுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், இனிதான் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிரந்தரமாக சம்பளம் வாங்கும் 2 கோடி பேருக்கு வேலை பறிபோகும் என்றும், மக்கள் தொகையில் பாதியினருக்கு தனிநபருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் அரசு கொடுத்துதவினால்தான் அவர்கள் இந்த சூழலை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ள முழுமையான தகவல்களை இணைப்பில் காணலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்