‘இனி நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்..’ டூவீலர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு ஜூன் ஒன்று முதல் பெட்ரோல் போடுவதில்லை என பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தும் விதமாக நாடு முழுவதும் பல வகைகளில் அரசும், துறை சார்ந்தவர்களும்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் போடுவதில்லை என நாட்டின் பல இடங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது முதல் கட்டமாக திருச்செந்தூர், குலசேகரன்பட்டிணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள 13 பெட்ரோல் பங்க்குகள் காவல் துறையுடன் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்காக மேற்கூறிய இடங்களில் பெட்ரோல் பங்க்குகளில் “நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்” என்ற அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஹெல்மெட் அணிந்து வருபவர்களைப் பாராட்டும் விதமாக 500 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த அறிவிப்பு இன்னும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படலாம்.

NOHELMETNOPETROL

மற்ற செய்திகள்