'கேள்வி கேட்ட போலீஸ்... திடீரென தீக்குளித்த ஆட்டோ டிரைவர்...' - அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சென்ற ஆட்டோ ஒன்றை போலீசார் பறிமுதல் செய்ததை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ‌ (இணைப்பில் உள்ளது: மாதிரிப்படம்)

தாம்பரம் அருகே படப்பை தெருவைச் சேர்ந்த 48 வயதான ஹரி என்பவர் என்கிற ஆட்டோ ஓட்டுநர், நேற்று காலை தனது ஆட்டோவில் தாம்பரத்துக்கு சவாரி வந்தார். காந்தி சாலை - முடிச்சூர் சாலை சந்திப்பு அருகே வந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் அவருடைய ஆட்டோவை தடுத்து நிறுத்தி பயணியிடமும் ஆட்டோ டிரைவர் ஹரியிடமும் விசாரித்தனர்.

விசாரணையில் காஞ்சி மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆட்டோ வந்திருப்பது தெரியவந்ததால் போலீசார்  இ-பாஸ் கேட்டுள்ளனர். ஆனால் இ-பாஸ் இல்லை என்பதால் அபராதம் விதித்து ஹரியின் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி தன் மீது பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து போலீசார் உடனே தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்