‘65 வருஷம் ஆச்சு’ ‘தீபாவளி கொண்டாடுனதே இல்லை’.. ‘ஆச்சரியப்பட வைத்த 13 கிராமம்’.. காரணம் என்ன தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 கிராமங்களில் 65 வருடமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் இருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.மாம்பட்டி, எம்.சந்திரபட்டி, எருமைப்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி உள்ள 13 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர். சுமார் 65 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை என தெரிவித்துள்ளனர். என்ன காரணமென்றால், ஒவ்வொரு வருடமும் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுவதை தவிர்க்க ஒரு முடிவு எடுத்துள்ளனர் அவர்களது முன்னோர்கள்.

கடந்த 1954 -ம் ஆண்டு கிராம மக்கள் ஒன்று கூடி தீபாவளி கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீபாவளியை தவிர்க்கும் அதே நேரம் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அறுவடை முடிந்த மகிழ்ச்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவித்துள்ளனர். 65 வருடங்களுக்கு முன்னர் எடுத்த முடிவை 13 கிராம மக்களும் கடைபிடிப்பது அவர்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.

DIWALI, TAMILNADU, SIVAGANGA, VILLAGES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்