VIDEO: “இந்த நடிகருக்கும் அந்த நடிகருக்கும் சண்டையா..? ஆனா அவங்களுக்குள் அப்படிலாம் ஒன்னுமில்ல!” - த்ரிஷா மாஸ் பேச்சு..! Exclusive

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா, முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், முதன்மை கதாபாத்திரத்தில் பெண் மைய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். த்ரிஷாவின் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் வெளியானது.

Advertising
>
Advertising

இதனிடையே விஜய்யின் 67வது படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக வந்த தகவல்கள் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் நேர்காணலில் த்ரிஷா பேசியுள்ளார்.  தளபதி 67 படத்தில் திரிஷா இணைந்ததாக செய்தி வந்தது குறித்து கேள்வி எழுப்ப இதற்கு பதில் அளித்த நடிகை த்ரிஷா, "அடுத்த வருஷம் அத பத்தி பேசலாம்" என தெரிவித்தார்.

இதேபோல், அஜித் - விஜய், ரஜினி - கமல், எம்ஜிஆர் - சிவாஜி ஆகியோரை போல த்ரிஷாவுக்கு எதிர் காம்போவாக யார் இருப்பார் என்ற கேள்விக்கு பதில் அளித்த த்ரிஷா, " ஏன் வழி தனி வழி" என்ற வாக்கியம் தான் என் எதிரே அமைந்திருக்கும் என குறிப்பிட்டார். மேலும், “நான் நடிக்க போட்டியா யாரையுமே பார்த்ததில்லை. நாங்க சில பேரு ஒரே சமயத்தில் நடிக்க ஆரம்பிச்சோம். அது அவ்வளவு தான். அதுக்கு மேல இந்த போட்டின்றது எதுவுமே கிடையாது. அதே மாதிரி இந்த போட்டின்றத மத்தவங்க தான் ஆரம்பிச்சு வைக்கிறாங்க. இந்த சோசியல் மீடியாவில் இரண்டு பேருக்கும் சண்டையா? அப்படிங்கற மாதிரி நிறைய நியூஸ் போவதை பார்த்து இருக்கோம். ஆனா அவங்களுக்குள்ள நிஜமாவே அப்படி ஒண்ணுமே இருக்காது. அதனால போட்டின்னு நான் யாரையும் சொல்லல. உண்மையாவே எல்லாருக்கும் ஒரு தனி வழி இருக்கு" என கூறினார்.

அதே போல த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ராங்கி படத்தின் டிரைலரில் , லேடிஸ் சூப்பர் ஸ்டார் என திரிஷாவே குறிப்பிட்டது பட்டத்தை விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கும் பதில் அளித்து அவர், " என்னோட சீரியல் எல்லாரும் சௌத் குயின் அப்படின்னா சொல்லுவாங்க. அதான் உங்க செல்லம்மா கொடுத்த ஒரு பேரு.  அவங்களுக்கு அது ரொம்ப பிடிக்கும் அன்போடு கொடுத்திருக்காங்க. ஆனா படத்தில் ஒரு டைட்டில் வரணும் அப்படின்றது எனக்கு தேவையில்ல நான் நினைக்கிறேன் இது என்னோட தனிப்பட்ட கருத்து. அடுத்தவன் வைக்கிறது நான் ஜட்ஜ் பண்ணல ஆனா எனக்கு அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். த்ரிஷா என்று கூப்பிட்டாலே போதும் நான் நினைக்கிறேன்" என நினைத்தார்.

LATEST TAMIL CINEMA NEWS, LATEST TAMIL NEWS, TRISHA, THALAPATH66, VARISUAUDIOLAUNCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்