மணிக்கு ‘11 கி.மீ’ வேகத்தில் வரும் நிவர் புயல்.. கரையை கடக்கும்போது காற்று எவ்வளவு வேகமாக வீசும்..? வானிலை மையம் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்று இரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிவர் புயலின் வேகம் மணிக்கு 7 கிலோமீட்டரில் இருந்து 11 கிலோமீட்டராக அதிகரித்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூரில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் புயலானது மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் சுழல் வேகம் மணிக்கு 105 கிலோமீட்டர் முதல் 115 கிலோமீட்டர் வரை உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கனமழை தொடரும் என்றும், காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளியேற்றப்படும் 1000 கன அடி நீர்'... 'செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை'... வெளியான தகவல்!
- ‘நிவர் புயலால் வெளுக்கும் மழை’.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘கோபாலபுரம்’ இல்லத்தில் புகுந்த மழைநீர்..!
- சென்னை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: ‘இந்த பகுதிகளில்’ வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
- 'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை!
- வெளுத்து வாங்கும் ‘கனமழை’.. நிவர் புயல் எங்கே கரையை கடக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்..!
- நிவர் புயலால் ஏற்படும் ‘சூறாவளி’.. இந்த 9 மாவட்டங்களில் ‘அதிக சேதம்’ ஏற்பட வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
- ‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
- செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா...? - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...!
- 3 மணிநேரம் நகராமல் இருந்த ‘நிவர் புயல்’.. என்ன காரணம்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்..!