‘மணிக்கு 5 கி.மீ. வேகத்தில்’... ‘மீண்டும் நகரத் துவங்கிய நிவர் புயல்’... ‘நாளை காலை அதிதீவிர புயலாக மாறும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், வங்கக்கடலில் ‘நிவர் புயல்’ உருவாகியுள்ளது. இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என்றும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருவதோடு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ வேகத்தில் இருந்து 5 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நிவர் புயல் 3 மணிநேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் நிவர் புயல் நகர துவங்கியுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கில் 430 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு அருகே 380 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, அதிதீவிர புயலாக நாளை காலை மாறி, புயலின் கண் பகுததி நாளை மாலை புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சில நேரத்தில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
- செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா...? - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...!
- 3 மணிநேரம் நகராமல் இருந்த ‘நிவர் புயல்’.. என்ன காரணம்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்..!
- ‘நிவர் புயல் எதிரொலி’... ‘அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு’... ‘ தமிழக அரசு நடவடிக்கை’...!!!
- ‘தொடர் கனமழை’!.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..? அதிகாரிகள் ‘முக்கிய’ தகவல்..!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால்.... ‘வானிலை மையம்’ முக்கிய ‘அப்டேட்!’
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
- ‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...!!!
- தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்' புயல்!.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்!.. பொதுமக்கள் அலர்ட்!
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!