‘புயல் நின்ன பிறகும் கரை ஒதுங்கிட்டே இருக்கு’.. கூட்டம் கூட்டமாக வந்து மூட்டை கட்டி விற்கும் ‘சென்னை’ மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிவர் புயலால் கப்பல்களில் இருந்து கீழே விழுந்து கரை ஒதுங்கிய நிலக்கரி துண்டுகளை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேகரித்து செல்கின்றனர்.

நிவர் புயல் காரணமாக சென்னையின் கடலோரப் பகுதிகளில் காற்று பலமாக வீசியது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சென்னையில் கடல் அலைகள் பத்து மீட்டர் உயரத்துக்கு எழுந்தன. இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் அனல்மின் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலக்கரிகள் பலத்த காற்றினால் கடலில் தூக்கி வீசப்பட்டன.

தற்போது இந்த நிலக்கரி துண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. காசிமேடு நாகரா தோட்டம், புதுவண்ணாரப்பேட்ட சூரிய நாராயண சாலை கடல் பகுதியில் ஏராளமான நிலக்கரி துண்டுகள் குவியல் குவியலாக கிடக்கின்றன.

இதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். புயல் ஓய்ந்த பின்னரும் வட சென்னை கடல் பகுதியில் நிலக்கரி துண்டுகள் பரவலாக கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மூட்டை மூட்டையாக நிலக்கரியை சேகரித்து விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்