ஒருவேளை ‘நிவர் புயல்’ அங்க கரையை கடந்தா.. சென்னையில் ‘மிக’ கனமழை பெய்யும்.. வெதர்மேன் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலின் திசை மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும்போது 100 கிலோமீட்டர் முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும் அல்லது 120 கிலோமீட்டர் வேகத்திலும் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நிவர் புயல் குறித்து தெரிவித்த வெதர்மேன் பிரதீப் ஜான், ‘தற்போதுள்ள சூழலில் 60 முதல் 70 சதவீதம் வரை நிவர் புயல் கடலூர் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. 25ம் தேதி பிற்பகலில் புயல் நெருக்கமாக வரும்போது திசை மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. புயல் வலுவடைக்கிறதா அல்லது வலுவிழக்கிறதா என்பதை பொறுத்து எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என நாளை முடிவு செய்யலாம். கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருவேளை மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடந்தால் சென்னைக்கு மிக கனமழை வாய்ப்புள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!
- உருவான ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னைக்கு மழை இருக்கா?.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி'... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!
- அடையாறு கரையோர மக்களுக்கு போலீசார் ‘எச்சரிக்கை’.. நிரம்பும் ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வீடுவீடாக சென்று விழிப்புணர்வு..!
- 'சென்னை'.. 'கனமழை'.. 'செம்பரம்பாக்கம்'.. 'வெள்ளம்' - தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள ‘முக்கிய’ தகவல்!
- "அடாது மழையிலும் அயராது உழைப்பவர்!".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்!.. #ViralVideo!
- சென்னையில் கனமழை...! '14 ஏரிகள் நிரம்பி அடையாறில் வெள்ளம்...' - 'இந்த' பகுதிகள்ல மட்டும் வெள்ள நீர் புகும் அபாயம்...!
- ஒரு ‘வாரத்துக்கு’ தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க.. பேரிடர் மேலாண்மை ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'?... மாநகராட்சி விளக்கம்!
- '12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு!!!'...