‘நிவர் புயல் எதிரொலி’... ‘அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு’... ‘ தமிழக அரசு நடவடிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் ‘நிவர்’ புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகலில், மகாபலிபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் 2 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழக கரையை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வரும் நிலையில் மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அவசர உதவி எண்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம்
மேலும் புயல் கரையை கடக்கும் போது திடீரென காற்றின் வேகம் குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். புயல் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
- ‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...!!!
- ‘தமிழகத்தில் இன்றைய (23-11-2020) கொரோனா பாதிப்பு அப்டேட்’... ‘குணமடைந்தவர்கள் எத்தனை பேர்?... சென்னை நிலவரம் என்ன???...
- தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்' புயல்!.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்!.. பொதுமக்கள் அலர்ட்!
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!
- 'தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’... 'மகாபலிபுரம் அருகே புயல் கடக்க வாய்ப்பு'... ‘புதிய புயலுக்கு இதுதான் பெயர்’...!!!
- ஆன்லைன் ‘ரம்மி’ விளையாட்டுக்கு தடை.. மீறி விளையாடினால் ‘சிறை’.. தமிழக அரசு அதிரடி..!
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- ஒரு ‘வாரத்துக்கு’ தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க.. பேரிடர் மேலாண்மை ‘முக்கிய’ அறிவிப்பு..!
- இன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு..? சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!