என் 'பெயர' மாத்திட்டேன்...! ஃபேஸ்புக்ல போட்ட 'ஒரே போஸ்ட்' தான் ...! 'சும்மா கொழுந்துவிட்டு எரியுது...' - வெடித்து கிளம்பிய சர்ச்சை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதாக நித்தியானந்தா அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என் 'பெயர' மாத்திட்டேன்...! ஃபேஸ்புக்ல போட்ட 'ஒரே போஸ்ட்' தான் ...! 'சும்மா கொழுந்துவிட்டு எரியுது...' - வெடித்து கிளம்பிய சர்ச்சை...!

தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்யானந்தாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தாவை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Nithiyananda announcement Vice-Chancellor Madurai Aadeenam

நித்யானந்தா, தான் ஒரு தீவையே வாங்கி விட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு மதுரை ஆதினம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் இயற்கை எய்த நிலையில், நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் நேற்று (17-08-2021) வெளியிட்ட பதிவில் தன்னை மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, தனது பெயரை 293-வது ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் அருணகிரி நாதருடன் தான் இருக்கும் பழைய படத்தையும் சேர்த்து பதிவிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்