அடர்ந்த காட்டுப் பகுதியில்.. தனியாக இருந்த ரிசார்ட்.. சுற்றுலா வந்த பெண் ஐ.டி ஊழியருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. பதைபதைப்பு சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஊட்டி விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல், மற்ற மாநிலங்களில் இருந்தும் பலரும் இங்கே வந்து சுற்றித் திரிந்து செல்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த டிராவிட்.. வீடியோவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போன 'CSK'

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து உதகைக்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம், பலரையும் பீதி அடைய செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வினிதா சவுத்ரி என்ற பெண் ஐடி ஊழியர் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

தொடர்ந்து, ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்து விட்டு, அவர்கள் அனைவரும் கல்லட்டி மலைப் பகுதியில் தனியாக அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றிலும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் ரிசார்ட் அருகே அமைந்துள்ள ஆற்றின் கரையோரம், மாலை நேரத்தில் நின்று கொண்டு அவர்கள் அனைவரும்  செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென வினிதா நிலைத் தடுமாறி கீழே விழ, வேகமாக வந்த காட்டாற்று வெள்ளம், அவரை இழுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ந்து போக செய்யவே, உடனடியாக மீட்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வினிதாவுடன் வேறு சிலரும் சிக்கிக் கொள்ள அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இரவு வரை வினிதாவை மீட்புக் குழு மற்றும் அதிகாரிகள் தேடி வந்தனர். ஆனால், இரவு நேரம் ஆகியும் கிடைக்காததால், மீண்டும் அதிகாலை ஐந்து மணியில் இருந்து வினிதாவை தேடும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளனர். அப்போது ஒரு மரத்தில், கடினமான சூழலில் சிக்கியிருந்த வினிதாவின் உடலை மீட்புக் குழு மிகவும் பத்திரமாக மீட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,வினிதா உள்ளிட்ட அனைவரும் தங்கி இருந்த ரிசார்ட், அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததும்.தெரிந்துள்ளது. மேலும், இதுபற்றி விசாரித்து உடனடியாக அந்த ரிசார்ட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சுற்றுலாவுக்கு வருபவர்கள் இது போன்ற ஆபத்தான இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், இனிவரும் காலங்களில் செல்ஃபி மோகத்தினால், இது போன்ற ஆபத்துகள் நேரக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊட்டியைச் சுற்றி பார்க்க வந்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே வேளையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ரிசார்ட் தொடர்பான தகவலும் பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இத மட்டும் பண்ணா உங்களுக்கு Fine தான்.." Switzerland இந்தியன் உணவகம் கொடுக்கும் அதிரடி 'Warning'.. "இது கூட நல்ல ஐடியா'வா இருக்கே.."

NILGIRIS, KALLATI RIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்