ஊட்டிக்கு தனியா தான் போகணும் போலையே! வெளியான கட்டுப்பாடுகள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி : நீலகிரி சுற்றுலா தளங்கள் காலை பத்து மணி முதல் மூன்று மணி வரைக்கும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

கொரோனா மூன்றாவது அலை தமிழகத்திலும் சமூகப் பரவல் அடைந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 

மீறினால் பெரும் ஆபத்து:

எனவே கொரோனா விதிமுறைகளை கட்டுப்படுத்தினாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த தளர்வை மக்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசின் கட்டுப்பாட்டை மீறினால் மக்களுக்கு தான் பெரும் ஆபத்தில் முடியும்.

காலை 10 மணி முதல் 3 மணி வரையில் அனுமதி:

எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்காவிற்கு காலை 10 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் அவசியம்:

மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், உடல் வெப்பநிலை எவ்வளவு உள்ளது என கவனிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கொரொனோ விதிகளை கவனிக்கிறார்களா என சிறப்பு குழுவினால் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NILGIRIS, TOURIST, நீலகிரி, சுற்றுலா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்