'காதலன் ஒருமணி நேரத்துல வருவார்னு சொன்னது...' 'எல்லாமே பொய், டிராமா...' - திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் அதிரடி திருப்பம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடைசி நிமிடத்தில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் வைரலானது.

தற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன வழக்கப்படி, மணமேடையில் மணப்பெண் மூன்று முறை சம்மதம் தெரிவித்த பின்புதான் தாலிகட்ட வேண்டும்.

அதன்படி மணப்பெண்ணிடம்  சம்மதம் கேட்டபோது இரண்டு முறை மௌனம் காத்த பிரியதர்ஷினி, 3-வது முறை கேட்கும்போது சம்மதமில்லை என்று கூறி, தாலி கட்ட வந்த ஆனந்தின் கைகளை தடுத்து நிறுத்தினார். தான் மனதார விரும்பும் ஒருவர், இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று கூறிக்கொண்டு, எழுந்து அங்கிருந்து செல்ல முயன்றார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை அடிக்க முயன்றனர்.

இதெல்லாம் நடந்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்த் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்.

இந்த நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னைக்கு புறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் அவர்கள் வீட்டிலேயே இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு மோசமான தகவல்கள் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே பொய் கூறி, டிராமா செய்து திருமணத்தை நிறுத்தியதாகவும் பிரியதர்ஷினி கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்