பதுங்கி இருக்கு, எப்படியாவது புடிச்சே ஆகணும்...! கரெக்ட்டா 'புலி' சிக்க போற நேரம் பார்த்து, திடீர்னு... - T-23 புலியின் 'வேற லெவல்' தந்திரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வாழும் புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடையை இந்த T-23 புலி. அந்தப் புலி மசினக்குடியில் கெளரி என்ற பெண்மணியை கடந்த வருடம் அடித்துக் கொன்றது.
பின்னர் அங்கிருந்து கூடலூர் அருகே இருக்கும் தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்து கொன்றது. இதை தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடை விலங்குகளையும் அடித்து கொன்றது.
இந்த நிலையில் ஆட்கொலி புலி மசினகுடிக்கு அருகில் இருக்கும் சிங்காரா வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசுவன் என்னும் நபரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொன்றது.
இதனையடுத்து, புலியை உடனடியாக சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், அந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பல நாட்களாக விடாமல் தொடர்ந்து போரடி வருகின்றனர். ஆனால், அந்தப் புலி வனத்துறையினருக்கு டிமிக்கி காட்டி வருகிறது.
நேற்று முன்தினம் (13-10-2021) புலியின் மீது மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் புலி அடர்ந்த புதருக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தேடுதல் தடைப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், தற்போது போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து விடாமல் 21 நாள்களாக தேடப்பட்டுவந்த புலி, நேற்று (14-10-2021) இரவு மசினகுடி - முதுமலை சாலையில் நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழுவினர் நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தினர். அதில், இரண்டு ஊசிகள் T-23 உடம்பில் செலுத்தப்பட்ட நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் மயங்கிய நிலையில் தப்பித்தது.
மயக்கநிலையில் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற புலியை நூற்றுக்கு மேற்பட்ட வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர். புலி சீக்கிரம் சிக்கிவிடும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: பயங்கர 'கோவமா' இருக்குது...! கொஞ்சம் பொறுங்க 'வெயிட்' பண்ணுவோம்...! 'கொஞ்சம் நேரம் சைலண்டா நின்னுட்ருந்த யானை திடீர்னு...' - நடுங்க வைத்த 'திக்திக்' நிமிடங்கள்...!
- திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...! தூரமா கொண்டுபோய் விட்டுட்டா எனக்கு வர தெரியாதா...? - 24 மணி நேரத்துக்குள்ள 'கெத்து' காட்டிய ரிவால்டோ...!
- பாகுபலிக்கு ஸ்கெட்ச்!.. கலீம் மற்றும் மாரியப்பனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்!.. யானைகளின் போர்க்களத்தில் வெல்லப்போவது யார்?
- 'ஒரு வீட்ல கூட ஆளு இல்ல...' 'கிராமமே காலியா இருக்கு...' 'கொரோனா செக் பண்ண போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...' - எல்லாரும் எங்க போய்ட்டாங்க...?
- 'காணாம போய் அஞ்சு மாசம் ஆயிருக்கு...' 'திடீரென ரெண்டு எடத்துல இருந்து வந்த தகவல்...' - உடனே வனத்துறையினர் செய்த காரியம்...!
- ‘மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் 6 மாதம் சிறை’.. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி..!
- VIDEO: மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா...! 'நாங்களும் பாடுவோம்ல...' - பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்...' - வைரல் வீடியோ...!
- எந்த பக்கமும் போக முடியாது... அர்த்த ராத்திரியில 'இப்படி' மாட்டிகிட்டோமே!.. அடர்ந்த காட்டுக்குள்... 'வீல்'னு ஒரு அலறல் சத்தம்!.. 'சாதிச்சிட்டீங்க'!!
- ‘40 வருசத்துக்கு அப்பறம்தான் இது பூக்கும்’.. ஒரு கிலோ 1000 ரூபாய், ‘மருத்துவக்குணம்’ வேற இருக்காம்.. கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் செல்லும் மக்கள்..!
- 'எடக்குமடக்காக சிக்கிய சஃபாரி வாகனம்'... 'எதிர்பாராத நேரத்தில் ஆக்ரோஷமான புலி'... வைரலாகும் வீடியோ!