'சென்னைக்கு வந்த கண்டெய்னரில் சிங்கமா'?... 'ஹாயாக உலாவும் புகைப்படங்கள்'... உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் வெளிநாட்டு கண்டெய்னர் வழியாக சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரவும் செய்தியில் உண்மை இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தி எவ்வாறு பரவியது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு.
சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி வாட்ஸ் ஆப் வாயிலாக புகைப்படங்களுடன் செய்தி ஒன்று பரவியது. வாட்ஸ் ஆப்பில் இந்த தகவலை பரப்பியவர் தனது பெயர் மற்றும் முகவரி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த தகவல் வைரலானதையடுத்து அதுகுறித்து காவல்துறையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவலை மறுத்த காவல்துறையினர் சமூகவிரோதிகள் தான் இந்த தகவலை வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். இதனிடையே இந்த சம்பவம் குறித்து ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்த புகைப்படங்கள் குஜராத் மாநிலம், பிபாவாவ் (Port Pipavav) துறைமுக பகுதியில் கடந்த வாரம் எடுக்கப்பட்டவை என தெரிவித்துள்ளது.
மேலும் துறைமுகத்தையொட்டிய காட்டுப்பகுதியில் இருந்து அடிக்கடி சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் இரைதேடி குட்டிகளுடன் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து நடமாடுவதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்வதாக விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் துறைமுகத்தில் சிங்கம் நடமாடும் புகைப்படம் மற்றும் விபத்தில் அடிப்பட்டு ரத்தகாயத்துடன் போராடிய இளைஞரின் புகைபடத்தையும் சேர்த்து ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை போன்று, சமூகவிரோதிகள் சிலர் வாட்ஸ் ஆப்பில் பொய்யான தகவலை பரப்பியுள்ளார்கள்.
இதனை முழு நேர வேலையாக செய்யும் இவர்கள், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி, மக்களை எப்போதும் பதற்றமான சூழ்நிலையில் வைத்திருக்க வேன்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். எனவே இதுபோன்ற தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளார்கள். பொதுமக்களும் இதுபோன்ற தகவல்கள் வந்தால் அதன் உண்மை தன்மையை அறியாமல் அதை ஷேர் செய்யாமல் இருப்பதே நலம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!
- ‘முகத்தைக் காட்டாம டிமிக்கி கொடுத்துவந்த பெண்’.. ‘கல்யாணம் வரை சென்ற வாட்ஸ் ஆப் காதல்’.. கடைசி நேரத்தில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- VIDEO: ‘பட்டப்பகலில்’ மூதாட்டியை தரதரவென இழுத்து.. சென்னையில் நடந்த பயங்கரம்.. பதறவைத்த சிசிடிவி காட்சி..!
- 'அடுத்தடுத்து'... 'ஒன்றுடன் ஒன்று 5 வாகனங்கள் மோதியதால்'... 'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து’!
- '300 கிலோ மீட்டர் வேகம்'... 'சென்னையில் இருந்து 3 மணி நேரம் தான்'... வரப்போகும் அதிவேக ரயில்!
- 'நாளைக்கு'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!
- 'கப்பலில்' வேலை இருக்கு வர்றியா... '30 லட்சம்' ரூபாயை தூக்கிக் கொடுத்த 'இளைஞர்கள்'... சுடச்சுட அல்வா கொடுத்த 'கன்சல்டன்சி ஓனர்'...
- ‘அதிரடியாக’ உயர்ந்துள்ள கேஸ் ‘சிலிண்டர்’ விலை... ‘இன்று’ முதல் அமல்... ‘சென்னையில்’ எவ்வளவு?...
- 'கடன் வாங்குனது குத்தமா?... கொலை பண்ணிடுவோம்னு மிரட்டுறாங்க'... போலீஸார் தீவிர விசாரணை!
- “30 நிமிஷத்துக்கு மேல நின்னு, நொந்து போறாங்க.. ப்ளீஸ் இந்த 5 டோல்கேட்டையும்..” - தமிழச்சி தங்கபாண்டியன்!