1, சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை; வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வதை போன்றது என்றும் சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
2, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்தது.
3, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 151 ஆக உள்ளது.
4, இந்திய வீரர்கள் மட்டுமே இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆலோசனை தெரிவித்துள்ளது.
5, இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு 3வது இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் 335, கேரளாவில் 265, தமிழ்நாட்டில் 234, கர்நாடகாவில் 110 பேரும் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளனர்.
6, சேலம் மாநகர எல்லைக்குள் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளை நடத்த தடை அறிவித்துள்ளது சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதே போல் மதுரையிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இறைச்சி கடை நடத்த தடை விதித்து இறைச்சி விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7, பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை, அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொரோனா மூலம் ஏற்பட்ட இளம் வயது உயிரிழப்பு இதுவாகும்.
8, தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் தயார் செய்யப்பட்டிருந்த இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை, அங்கு உணவு உட்கொண்டு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி செய்தார். மேலும் வீடு தேடி மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் தொடங்கிவைத்தார்.
9, நாளை (ஏப்ரல் 3) காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!
- 'நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்'... 'எனக்கு வேணாம் அவங்களுக்கு கொடுங்க'... 'மரணத்திற்கு' முன் 'மூதாட்டி' செய்த 'கலங்கவைக்கும்' காரியம்...
- 'சிலிண்டர்' லாரி மீது 'மோதிய' வேகத்தில்... அடியில் 'சிக்கிய' கார்... முன்பகுதி 'தீப்பிடித்து' கோர விபத்து...
- போற போக்குல... மதுரை 'மல்லி'யையும் விட்டு வைக்கல...மொத்தமா 'ஆப்பு' வச்சுருச்சு!
- உலகம் முழுவதும் 'பொருளாதார' மந்தம் ஏற்படும்... இந்த 2 நாடுகள் மட்டும் 'எஸ்கேப்' ஆக வாய்ப்பு இருக்காம்... செம ஷாக்!
- சென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!
- ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி?’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...!’.. மகளின் உருக்கமான பதிவு..!
- ‘காய்ச்சல், இருமல் இருக்கானு’... ‘கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார ஊழியர்களுக்கு’... ‘வாணியம்பாடி மக்களால் நடந்த பரபரப்பு’!
- 'நான் பெத்த மவனே லாக்டவுன்...' 'லாக்டவுன்...' 'உள்ளேன் ஐயா...!' "பேரு வக்கிறதுல நாங்க தான் கிங்..." 'தொடரும் உ..பி'ஸ். அட்ராசிட்டிஸ்...'