ரொம்ப நேரமா திறக்காத கதவு.. உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. கல்யாணமாகி 2 மாசத்துல தம்பதி எடுத்த விபரீத முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி அருகே திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமண தம்பதியர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஏஎம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்க முனியசாமி. 26 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தங்க முனியசாமியும் துவரந்தை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி எனும் இளம் பெண்ணும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தங்க முனியசாமி மற்றும் சீதாலட்சுமி வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இதனிடையே இருவருக்குமிடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று இந்த தம்பதி குடியிருந்த வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கின்றனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் தம்பதியின் வீட்டு கதவை தட்ட, எவ்வித பதிலும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போதுதான், தங்க முனியசாமி மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி தங்களது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து தருவை குளம் பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி சப்- கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமண தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளிநாட்டில்.. காருக்குள் இருந்த இந்திய இளைஞர் உடல்??.. போனில் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!
- 12 வருசமா தேடியும் கிடைக்காத குற்றவாளி?.. கடைசியா அவரு இருக்குற இடம் பத்தி தெரிஞ்சதும் திகைச்சு போன போலீஸ்.. இங்க எப்டி?
- ரயில்ல முன்பதிவு செய்த சீட்களை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்.. இடம் விட மறுத்ததால் பயணிகள் அவதி.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்..!
- "எங்க கிட்ட சரசம் பண்ணுறதுக்குன்னே வருவீங்களா டா?".. ரொமான்டிக்கா போஸ் கொடுத்த மாப்பிள்ளை.. உள்ள வந்து குரங்கு பாத்த வேலை!!
- நான்கு வருசமா பாதியிலேயே கிடக்கும் வீடு?.. "சொந்த ஊருக்கு போயிட்டு வரேன்னு சொன்னவரு".. திகிலூட்டும் பின்னணி!!
- ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து கூலித் தொழிலாளியின் மகளை பெண் கேட்ட இளைஞர்.. படுஜோராக நடந்த திருமணம்!
- ஆற்றில் கிடந்த இளம்பெண் உடல்.. துப்பு கிடைக்காம போலீஸ் தவிச்சப்போ.. பெண்ணின் செருப்பில் இருந்த 'Clue'!!.. திடுக்கிடும் சம்பவம்!!
- VIDEO: "லத்தி, துப்பக்கி எப்பவுமே கார்ல இருக்கும்.. இறங்கி அடிச்சாப்றம்தான் அவன் ரவுடினு தெரிஞ்சுது" - சினிமாவை மிஞ்சும் ஆக்ஷன் சம்வங்கள் பண்ணிய விஜயகுமார் IPS | Exclusive
- சூர்யாதேவி தொடர்பில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைதா?.. பரபரப்பு தகவல்கள்
- கணவரின் போனுக்கு வந்த மனைவியின் வீடியோ.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!