'பிரியாணி' பிரியர்கள் செம ஹாப்பி'...'நிரம்பி வழிந்த கூட்டம்'... கட்டுப்படுத்த வந்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரியாணிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுவும் பத்து ரூபாய்க்கு பிரியாணி வழங்கினால் யாருக்கு தான் சாப்பிட ஆசை இருக்காது. இந்த சுவாரசியமான சம்பவம் நடைபெற்ற இடம் தேனி மாவட்டம் பெரியகுளம்.
தேனி மாவட்டத்தில் முரளி ரெஸ்டாரண்ட் என்ற புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழா சலுகையாக ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், முரளி ரெஸ்டாரண்டிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் ஹோட்டலில் கூட்டம் அலைமோத, போக்குவரத்து பாதிக்காத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே இதுதொடர்பாக பேசிய ஹோட்டல் உரிமையாளர் ''பெரியகுளம் பகுதி மக்களில் பலருக்கு பிரியாணி என்பது பெரிய கனவாகவே இருக்கிறது. அது தற்போது நிறைவேறி இருக்கிறது. அதோடு திறப்பு விழா சலுகையாக குறைந்த விலையில் கொடுக்க நினைத்தோம். அதற்கு மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. 7ஆயிரம் பிரியாணியும், 7 ஆயிரம் பரோட்டாவும் கொடுப்பதே இலக்கு. இறுதியில் அந்த எண்ணிக்கை சற்று அதிகமாயிருக்கும்'' என நிறைவுடன் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..
- 'மூன்று கல்யாணம்' பண்ணியும் நிம்மதி இல்ல'...சண்டையிட்ட 'மனைவிகள்' ...'இளைஞர் செய்த விபரீதம்'!
- 'பிரிந்து சென்ற பெற்றோர்'...'4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- 'பிரியாணி'க்கு ஆசைப்பட்டு 'ரூ 40 ஆயிரம்' போச்சே'... 'சென்னை 'கல்லூரி மாணவி'க்கு நேர்ந்த சோகம்!
- 'பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே'.. மனைவியிடம் போன் பேசிய புதுமாப்பிள்ளை.. நொடியில் நேர்ந்த சோகம்!
- ‘ஒரு கொலை விசாரணையில் பிடிபட்ட இன்னொரு கொலையின் குற்றவாளிகள்..’ தேனியில் பரபரப்பு..
- 'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'!
- “தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் நடந்த சோகம்”!... எதிர்பாராமல் மிளா உயிரிழந்த பரிதாபம்! நெஞ்சை நெகிழ வைக்கும் காரணம்!
- 'கும்பிடு போட்டதுக்கு’.. பொசுக்குன்னு கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்.. பரபரப்பு சம்பவம்!
- குரங்கணியைத் தொடர்ந்து தேனி ஆயில் மில்லில் தீ விபத்து.. 10 மணி நேரம்.. பதறவைத்த நொடிகள்!