‘நெறைய பேர் கிட்ட இருக்காதுன்னுதான் இந்த ஆஃபர் போட்டோம்’.. ஆனா கட்டுக்கடங்காமல் கூடிய மக்கள் கூட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

‘நெறைய பேர் கிட்ட இருக்காதுன்னுதான் இந்த ஆஃபர் போட்டோம்’.. ஆனா கட்டுக்கடங்காமல் கூடிய மக்கள் கூட்டம்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிராய்லர் கோழிக்கடை நிறுவனம் ஒன்று, உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் புதிதாக ஒரு கிளையை திறந்தது. இந்த கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு ஒரு கிலோ கோழிக்கறி வழங்கப்படும் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

Newly opened Chicken shop offers 1 kg chicken meat 5 paise

இந்நிலையில் கடையின் திறப்புவிழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் 5 பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க குவிந்தனர். இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்தினர்.

Newly opened Chicken shop offers 1 kg chicken meat 5 paise

பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே 5 பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததாகவும் கடையின் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இது மக்கள் பழைமை மறக்காமல் உள்ளதை காட்டுவதாகவும் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்