'ஆறுதல் சொல்லியும் கேக்கல'...'கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு'... 'என்ஜினீயர்' எடுத்த விபரீத முடிவு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்ப்பம் கலைந்ததால், திருமணமான ஆறாவது மாதத்தில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்த புட்டுசாமியின் மகள் சரஸ்வதி. பி.இ. சிவில் படித்திருந்த சரஸ்வதிக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்பது சரஸ்வதிக்கு கனவாக இருந்ததால், காரைக்குடியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் சரஸ்வதி கர்பமடைந்த்தால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். இதனைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு தனது கிராமத்திற்கு சென்ற சரஸ்வதிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைத்து சரஸ்வதிக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன சரஸ்வதி கதறி அழுதார். உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர். எனினும் அவர் ஆறுதல் அடையவில்லை.
இதனிடையே கர்ப்பம் கலைந்தது குறித்து தினமும் அழுது கொண்டே இருந்த சரஸ்வதி, கடந்த 5-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று முன்தினம் இறந்தார்.
கர்ப்பம் கலைந்த காரணத்தினால் திருமணமான இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வியாபாரத்தில் நஷ்டம்'.. தொழிலதிபரின் குடும்பமே எடுத்த முடிவு.. 'தமிழகத்தை உலுக்கிய சோகம்'!
- 'மேக்-அப் ரூம்க்கு போன என்ஜினியர் மாப்பிள்ளை'.. 'திருமணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக'.. நடந்த சோகம்!
- 'மகனையும், மகளையும் தொந்தரவு பண்ணாதீங்க'...'சிக்கிய உருக்கமான கடிதம்'...சென்னையில் நிகழ்ந்த சோகம்!
- கணவர் வெளிநாட்டில்.. 'மைனர் தோழிக்கு திருமணம் செய்துவைத்த பள்ளி மாணவியின் சோக முடிவு!
- ‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!
- 'தூக்கிட்டபடி தாயின் மர்ம மரணம்'.. 'ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை'.. உலுக்கிய சம்பவம்!
- 'உங்க மேல கம்ப்ளெய்ண்ட் வந்துருக்கு.. கொஞ்சம் வர்றீங்களா?'... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போன்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
- 'ஒருகாலும் தோக்கக் கூடாது; தேவை உழைப்பு மட்டும்தான்'.. இந்தியாவிலேயே முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஐஏஎஸ்!
- திடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்..! சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..!
- 'கல்யாணம் பண்ணலாம்'...'ஆனா உன்மேல சந்தேகமாக இருக்கு'... இளைஞர் செய்த கொடூரம்!