"கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல.." வீடு புகுந்த பெண்ணின் தந்தை.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், புது ஜோடிக்கு நேர்ந்த துயரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை அடுத்த வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் மாணிக்க ராஜ். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த முத்து குட்டி என்பவரின் மகளான ரேஷ்மாவுக்கும், மாணிக்க ராஜூவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் ரேஷ்மாவின் தந்தையான முத்து குட்டிக்கும் தெரிய வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முத்து குட்டி மற்றும் குடும்பத்தினர், ரேஷ்மாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், காதலர்களான மாணிக்க ராஜ் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் தங்கள் ஊரில் இருந்து வெளியேறி, மதுரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கே திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, தங்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மீண்டும் தங்களின் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு மாணிக்க ராஜ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் வந்துள்ளனர். மேலும் தனது மகள் மற்றும் மாணிக்க ராஜ் ஆகியோர் சொந்த ஊருக்கு வந்த தகவல் தெரிந்த முத்து குட்டி, கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தனது மகள் ஓடிச் சென்றதால் ஊரார் முன்னால் அதிகம் அவமானங்களை எதிர் கொண்ட முத்து குட்டி, ரேஷ்மா மற்றும் மாணிக்க ராஜ் ஆகியோர் சொந்த ஊரில் இருப்பதை அறிந்து நேரடியாக அவரது வீட்டிற்கும் கோபத்துடன் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவர் மட்டுமே தனியாக வீட்டில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது அங்கே சென்ற முத்து குட்டி, தான் இருந்த உச்சகட்ட கோபத்தில் தனது மகள் என்றும் பாராமல் ரேஷ்மாவையும், அவரது கணவர் மாணிக்க ராஜையும், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் கூறுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ரேஷ்மா மற்றும் மாணிக்கராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் கொலை செய்த முத்து குட்டியையும் தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குட்டியை போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
காதலித்து இருவரும் திருமணம் செய்த நிலையில், ஒரு மாதம் கூட ஆவதற்கு முன்பு, பெண்ணின் தந்தை செய்த சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவ அம்மா இறந்த கொஞ்ச நாள்லயே அப்பாவும் விட்டுட்டு போய்ட்டாரு.. ஆனா இப்போ..".. CBSE தேர்வில் சாதிச்ச பேத்தியை நினச்சு உருகிய பாட்டி..!
- சத்தமாக பாட்டுக்கேட்ட மகன்.. சவுண்டை குறைத்த அப்பாவுக்கு நேர்ந்த கதி.. நடுங்கிப்போன குடும்பத்தினர்..!
- வாடகை டூ சொந்த வீடு.. "104 வருஷமா இங்க தான் இருக்கேன்!".. நெகிழவைக்கும் மூதாட்டி.!
- "என் அப்பா பக்கத்துல இருக்க மாதிரி தோணுது".. இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் போட்ட திட்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ..!
- "இனிமே அப்பா தேவையில்ல.." திருநங்கையாக மாறிய எலான் மஸ்க் மகன்.. பரபரப்பை ஏற்படுத்திய பின்னணி..
- “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!
- "10-வது கூட பாஸ் பண்ணலையேன்னு ரொம்ப கவலைப்பட்டிருக்கேன்".. அப்பாவுக்கு பயிற்சி அளித்த மகன்.. பரீட்சை ரிசல்ட்டை பார்த்து திகைச்சு போன உறவினர்கள்..!
- விபத்தில் இறந்த மனைவி.. விஷயத்தை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை.. வீடு திரும்பியதும் கலங்கிய மாணவிகள்
- மாற்றுத் திறனாளி அப்பாவின் பாசம்.. கலெக்டர் பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ.. ஹார்ட்டின்களை பறக்கவிட்ட நெட்டிசன்கள்..!
- அப்பாவை காணோம் என புகார் கொடுத்த மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. சென்னையில் ஷாக்..!