'ஊட்டி குளிரில் நடுங்கிய நிலையில்'... 'பிறந்து 2 மணிநேரமே ஆன ஆண்குழந்தை'... 'அதிர்ச்சியான பெண்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ளது அரசு தாவரவியல் பூங்கா. அங்கு தோடர் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் வழியில், அடர்ந்த மரங்கள் காணப்படும். இந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 8 மணியளவில், பெண்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்கள், அங்கு சென்று பார்த்தபோது, மரத்தின் அடியில் குளிருக்கு நடுங்கிய நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அழுதபடி கேட்பாரற்று கிடந்தது.
இதையடுத்து, போலீசாருக்கு புகார் கொடுத்ததுடன், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்து 2 மணி நேரமே ஆன, 2.5 கிலோ எடை உள்ள அந்த ஆண்குழந்தை, உடல்நலம் தேறியதும், குழந்தைநல பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 580 கிராம் எடையுடன் .. 5 மாதங்கள் 'போராடிய' தேவதை.. உண்மையிலேயே 'ஜான்சிராணி' தான்!
- ‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..
- ‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..
- 'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்!
- ‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..
- ‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..
- 'அவன் என்ன உன் முதல் புருஷனா..? இல்ல நீதான் அவனுக்கு முதல் தாராமா?'.. பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த கொடுமை!
- ‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
- 'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!
- ‘தாய்க்கும் 3 மாத பெண் குழந்தைக்கும் நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’.. ‘கணவர் செய்த கொடூரம்’..