டான்ஸ் ஆடுனது பிரச்சனை இல்ல.. IT மாப்பிள்ளையை மாத்துனத்துக்கு காரணம் இதுதான்.. மணப்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பண்ருட்டி அருகே டான்ஸ் ஆடியதை கண்டித்ததற்காக மணமகனை மாற்றிய விவகாரத்தில் மணப்பெண் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீதர் என்பவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே திருமணத்துக்கு முந்தை நாள் காடாம்புலியூரில் உள்ள மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் விட்டார் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனை அடுத்து பெண் அழைப்பு முடிந்தும் திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது  மணமகள் விட்டார்கள் மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது மணமகள் மற்றும் மணமகளின் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக நடனமாடியுள்ளனர். அந்த சமயம் உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடிய சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் உடனே மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணப்பெண்ணை மணமகன் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறினார். உடனே மணப்பெண்ணுக்கு முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் ஸ்ரீதர், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து, திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது என்னையும் மணமகள் ஜெய்சந்தியாவையும் நடனமடா சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர். மேலும் பெண் வீட்டு உறவினர் மணப்பெண்ணின் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஏன் இதுபோல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் நானும் எனது குடும்பமும், உறவினர்களும் மனவேதனை அடைந்துள்ளோம். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகியுள்ளது. இதனால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடு பெற்று தர வேண்டும் என மணமகன் ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மணமகள் ஜெயசந்தியா மணமகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், டிஜே நிகழ்ச்சியின் போது மணமகன் ஸ்ரீதர் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது கார் மற்றும் 50 சவரன் நகை கூடுதலாக கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் எனக் கூறியதாக ஜெயசந்தியா கூறியுள்ளார்.

மேலும் ‘எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும், உன்னை எவன் கல்யாணம் பண்ணிப்பான்’ எனக் கூறியதால்தான் மாமன் மகனை திருமணம் செய்ததாக ஜெயசந்தியா கூறியுள்ளார். இது தனது விருப்பத்துடனே நடந்ததாகவும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மணமகன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். நடனமாடியதை கண்டித்ததால் மணமகன் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மணப்பெண் வரதட்சணை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CUDDALORE, DJ, MARRIAGE, GROOM, BRIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்