‘நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்’.. ஆவடி நண்பர்கள் மர்ம மரணம் வழக்கில் அதிரடி திருப்பம்.. பரபரப்பு பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆவடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நண்பர்கள் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை

சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் (வயது 30). ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). கடந்த 2019-ம் ஆண்டில் வெவ்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது நண்பர்களாகியுள்ளனர். இதனை அடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. அதனால் ஜெகன், அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது மணிகண்டனின் மனைவி ப்ரேசில்லாவுடன் ஜெகனுக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

உருவான பகை

இதனால் மணிகண்டனின் மனைவி ப்ரேசில்லாவை ஜெகன் தன்னுடன் அழைத்துச்சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மாலதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாககூறப்படுகிறது. இந்த சூழலில் மணிகண்டன், ஜெகன் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நிர்வாண வீடியோ

இதனிடையே கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இந்த வீடியோவை டெலிட் செய்து விடுவதாக ஜெகன் கூறியதாக சொல்லப்படுகிறது.

மைதானம்

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ஜெகன் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மைதானத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கு வந்துள்ளனர். இதைப் பார்த்ததும் ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை

அப்போது சிக்கிய ஜெகனின் நண்பர்களான அசாருதீன் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் மணிகண்டனின் கூட்டாளிகள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவை அனைத்தும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனிப்படை

இதனை அடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி சரக காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சூழலில் இந்த குற்ற செயலுக்கு மூளையாக செயல்பட்ட மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உயிரிழந்த அசாருதீனுக்கு கவுசி என்ற நிறைமாத கர்ப்பிணி மனைவி உள்ளார். சுந்தருக்கு, பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CHENNAI, AVADI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்