தமிழக அரசு துறைகளில் புதுசா ‘இப்படி ஒரு போஸ்டிங்!’ .. இனி ‘இவங்களுக்கு’ அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்ற புதிய வேலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தட்டச்சு, கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு அரசுப் பணி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல நிலைகளில் குரூப்-சி பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அலுவல் தகவல்களை ஆவணப்படுத்துவது, கடிதங்கள், அறிக்கைகள் தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். ஆனால், முன்பு தட்டச்சுப் மூலமாக நடந்த பணிகள் அனைத்தும் தற்போது கணினியிலேயே செய்யப்படுகின்றன. இதனால், தட்டச்சர்களும் இந்த பணிகளை கணினி மூலமாகவே செய்கின்றனர்.

இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் தட்டச்சர் பதவியானது ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ என்கிற பதவியாக மாற்றப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழக அரசுஅலுவலகங்களில் தட்டச்சு இயந்திரங்களே இல்லாத நிலையில், இன்னும் தட்டச்சர் பதவி அதே நிலையில் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு தேர்ச்சி அல்லது தமிழ், ஆங்கிலத்தில் ஒன்றில் ஹையர் கிரேடு மற்றொன்றில் லோயர் கிரேடு தேர்ச்சி இதெல்லாம் தான் அடிப்படை தகுதிகள். ஆனால் கூடுதலாக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியும் இதற்கு அவசியம்.

இந்நிலையில், அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்கிற புதிய போஸ்டிங்கை உருவாக் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  பட்டப் படிப்புடன்,தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு தேர்ச்சியும், அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சி பெற்ற சான்றிதழ் என்பதெல்லாம் தான் அடிப்படை கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், கம்ப்யூட்டரில் மணிக்கு 8 ஆயிரம் ஸ்ட்ரோக் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பது உள்ளிட்டவைதான் மத்திய அரசு பணியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்