கணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை செவ்வப்பாடிபுதூரை சேர்ந்த சுகவனேஸ்வரன்(25) என்பவருக்கும், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த சத்தியா(22) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 10-ம் தேதி சுகவனேஸ்வரன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகவனேஸ்வரன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுகவனேஸ்வரன் இறந்தார்.
திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கூலி' வேலை செஞ்சு வாங்கி கொடுத்தேன்... 'டிக் டாக்' காதலால் கர்ப்பமான 'சிறுமி' தீக்குளித்து தற்கொலை... கதறும் பெற்றோர்!
- விமான நிலையத்தில் வேலை... '1 கோடி ரூபாய் மோசடி'... பெண் ஊழியர் விபரீத முடிவு... சென்னையில் பயங்கரம்!...
- ‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..!
- ‘40 வயசாச்சு, எனக்கு கல்யாணமே நடக்காதா?’.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த எலக்ட்ரீசியன்..!
- ‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..!
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- 'படிக்காம' இப்டி ஊர் சுத்துறியே?... கல்லூரி மாணவரை 'கண்டித்த' பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்!
- 'சிக்கிய கடிதம்'... 'அவிழாத மர்மம்'... 'மாணவிக்கு என்னதான் நடந்துச்சு'... வெளியான பரபரப்பு தகவல்!
- "அடடே! தம்பி நீங்களும் 'பாத்ரூம்ல' வழுக்கி விழுந்துட்டீங்களா..." "வாங்க வாங்க' மாவுக்கட்டு' போடலாம்..." போலீசாரை 'தாக்கியவருக்கு நேர்ந்த கதி...
- “எனக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் கெடைக்குமா?”.. ட்விட்டரில் அதிரவைத்த நபர்.. “சிட்டி போலீஸ்” கொடுத்த “மரண மாஸ்” ரிப்ளை!