அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ‘மறுபடியும்’ மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணி முதல் 2.30 மணி வரை கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி, கடலூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது அவைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிவர் புயலால் வாழை, நெல் பயிர் உள்ளிட்டவைகள் பல ஏக்கர் அளவுக்கு சேதமடைந்தன. இதனை அடுத்து நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் பழனிசாமி நேற்று கடலூருக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்