'மூணு' நாளைக்கு 'ஒண்ணு' தான்... தமிழகத்தில் 'மதுபானம்' வாங்க... 'அதிரடி' நிபந்தனைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான தடையை மறுத்து தீர்ப்பளித்தது.
ஆனால், அதே வேளையில் சில நிபந்தனைகளையும் உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. மூன்று நாளுக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதே போல வாங்க வருபவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும். ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வழியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும். அப்படி பணம் செலுத்துபவருக்கு இரண்டு பாட்டில்கள் பெற்றுக் கொள்ளலாம். அனைத்தையும் விட முக்கியமாக சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக தமிழக அரசு அறிவித்த விளக்கத்தில் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் எந்தெந்த வயதினருக்கு எப்போது மதுவிற்பனை?.. வெளியான முழுவிவரம்..!
- 'வீட்டுக்கு' அனுப்பப்படும் 'கொரோனா நோயாளிகள்...!' ' தமிழக அரசு நடவடிக்கை...' ''காரணம் என்ன தெரியுமா?...''
- இந்த 'ரெண்டையும்' எடுத்துட்டு வந்தா 'மட்டும்' தான் தருவோம்... அதிரடியாக 'அறிவித்த' மாவட்டம்!
- 'கொட்டும்' மழையிலும் 'குடையுடன்' டாஸ்மாக் வாசலில், வரிசையில் நிற்கும் 'மதுப் பிரியர்கள்!'.. 'வைரல்' சம்பவம்!
- ‘இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘இப்படி வந்தாதான் மதுபானம் கிடைக்கும்’... 'புதிய நிபந்தனை விதித்த மாவட்ட நிர்வாகம்'!
- கொரோனா தொற்று காலகட்டத்தில்... மதுக்கடைகள் திறக்கப்படுவது ஏன்?.. அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து!
- கம்பம் அரசு மருத்துவமனையில் ‘4 நாளில் 40 பிரசவங்கள்’ பார்க்கப்பட்டது.. மருத்துவ அலுவலர் தகவல்..!
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- பிரசவ வலியில் 'கதறித்துடித்த' பெண்... இறுதியில் நேர்ந்த... நெஞ்சை 'உறைய' வைக்கும் சம்பவம்!
- 'இந்த தேதியில இருந்து தெறக்கலாம்' அனுமதி அளித்த அரசு... என்னென்ன கட்டுப்பாடுகள்?