அட!.. தமிழ்நாட்டில் வரிசை கட்டும் புதிய விமான நிலையங்கள்!... அதிரடி திட்டம்!.. உங்க ஊரும் லிஸ்ட்ல இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

தமிழகத்தில் விமான சேவைகள் விரிவாக்கம் செய்வது குறித்து திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தமிழகத்திற்கு 195 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, தமிழகத்தில் 5 விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் பயன்படும். அதன்படி தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களுக்கு விமான சேவைகளை தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலத்திற்கு 35 கோடி, தஞ்சைக்கு 50 கோடி, நெய்வேலிக்கு 30 கோடி, வேலூருக்கு 44 கோடி, மற்றும் ராமநாதபுரத்திற்கும் 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சில விமான நிலையங்கள் இயக்கத்தில் இருக்கின்றன.

அவ்வாறு இருந்தாலும் முறையான அனைத்து சேவைகளும் இல்லை. இதனால் சிறிய விமான நிலையங்களை செயல்பாட்டுக்கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது" என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்